பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
பவானி:பவானி யுவ ஜன பக்த பஜனை சபா சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. பவானியில், கடந்த ஐந்தாம் தேதி உஞ்ச விருத்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. பல்வேறு பூஜைகள் நடந்தது. ஆறாம் தேதி காலை, சம்பிரதாய உஞ்சவிருத்தியும், ஸ்ரீராதா திருக்கல்யாணம், மஹா தீபாராதனையும், இரவில் ஸ்ரீஆஞ்சநேய உற்சவம், மங்கள ஹாரத்தி நடந்தது. இந்த ஸ்ரீராதா கல்யாணம் குறித்து கூறுகையில், ""சுவாமி ஸ்ரீராதையும், கிருஷ்ணரும் மனம் ஒத்து திருமணமானது, மார்கழி முதல் நாள் துவங்கி தொடர்ந்து, 30 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியாகும். இதில் அதிகாலை நகர்வலம் வந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடி சுவாமி வழிபாடு நடக்கும். மார்கழி 22ம் நாள் கல்யாண ஹஷ்டபதி பாடி பகவானுக்கு திருமணம் செய்வித்தல் நிகழ்ச்சி நடக்கும். இதனால் குடும்பத்தில் சேமம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் கை கூடும், என்றனர். கும்பகோணம், தேப்பெருமாநல்லூர் நரசிம்மபாகவதர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் கல்யாண உற்சவம் நடத்தினர். கல்யாண உற்சவ நிகழ்ச்சியில், 700 பேர் பங்கேற்றனர்.