கள்ளக்குறிச்சி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2026 11:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டோல்கேட் அலுவலகத்தில் வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி மாடூரில் சேலம் – உளுந்துார்பேட்டை டோல்கேட் அலுவலகம் உள்ளது. இங்குள்ள வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா பூஜை நேற்று நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. என்.எச்., 79 திட்ட மேலாளர் சதீஷ்சுப்ரமணியன், டோல்கேட் மேலாளர் ராஜேஷ், பிளாசா மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.