பெண்ணாடத்திற்கு வந்த ஆதியோகி ரத யாத்திரை; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2026 10:02
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதை முன்னிட்டு ஒவ் வொரு ஆண்டும் ‘ஆதியோகி’ ரத யாத்திரை, ஜனவரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும். அதன்படி, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இறையூர், ஆவினங்குடி, திட்டக்குடி, ராமநத்தம் வழியாக சென்று, வரும் 15ல் ஈஷா யோகா மையம் சென்றடைகிறது.