தை பஞ்சமி; கோவை வாராகி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2026 10:02
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் உக்கடம் -சுண்டக்காமுத்தூர் பை.பாஸ் ரோட்டில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த வாராஹி அம்மன். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோன்று சாய்பாபா காலனி கே கே புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் வாராஹி அம்மன் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த மூலவர் வாராகி அம்மன். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.