அம்மகளத்துார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 10:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து, மகா தீபாரதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.