பதிவு செய்த நாள்
09
ஜன
2013
11:01
திண்டிவனம்: திண்டிவனம் வட்ட நாதஸ்வர தவில் கலைஞர்கள் சார்பில் இசை விழா நடந்தது.திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 32ம் ஆண்டு சங்கீத இசை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி, தியாகப்பிரம்மம் திருவுருவ படங்களுடன் ஊர்வலம் நடந்தது.மாலை 6 மணிக்கு, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வழக்கறிஞர்கள் பத்மநாபன், சங்கரன், தொழிலதிபர்கள் பி.ஆர்.எஸ்., ரங்கமன்னார், ராம் டெக்ஸ் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு திருவெண்னைநல்லூர் சேகர், ஆயந்தூர் பிச்சைமுத்து நாதஸ்வரமும், துலக்கம்பட்டு முரளி, வைப்பாளையம் முருகவேல் ஆகியோர் தவிலும் வாசித்தனர்.இரவு 10.30 மணிக்கு நடந்த சிறப்பு இசைவிழாவில் திருக்கோவிலூர பாபு, குமார் நாதஸ்வரமும், திருப்புன்கூர் முத்துகுமாரசாமி, வெளியம்பாக்கம் பழனிவேல் ஆகியோர் சிறப்பு தவில் கச்சேரி நடத்தினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் வட்ட நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.