Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவ்டால் முனீஸ்வரர் கோவில் விழா ... நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடக்கம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
02:02

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக புதிய தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் மாசி பெருவிழா இம்மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 16ம் தேதி மயானகொள்ளையும், 19ம் தேதி தீமிதி விழாவும், 21ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக மாறி விழா எடுக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைக்கின்றனர். இந்த ஆண்டு புதிய தேர் கட்டும் பணி கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. நிலையாக செய்து வைத்துள்ள தேர் சக்கரம், பீடம், கலசம் தவிர்த்து மீதம் உள்ள பாகங்களை பனை, காட்டுவா உள்ளிட்ட பச்சை மரங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர். பாரம்பரியமாக இக்கோவிலுக்கு தேர் வடிவமைக்கும் தச்சு தொழிலாளர்கள் இப்பணியை செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar