ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்: திருக்கல்யாண திருவிழா நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2026 10:04
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு இன்று புஷ்ப யாகம் நடந்தது.
இக்கோயில் மார்ச் 24 அன்று கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடந்தது. ஏப். 1 இரவு திருக்கல்யாணம் நடந்தது. நிறைவு நாளான இன்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் பல வண்ண மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு புஷ்ப யாகம் நடந்தது. ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.