பரங்கிப்பேட்டை அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2026 11:02
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் சம்போடை, அங்காளம்மன் கோவிலில், 74 வது ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர், கோவிலில் இருந்து புறப்பட்டு பு.முட்லுார் ஜவுளிக்கடை, எம்.ஜி.ஆர்., சிலை உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் கோவில் வந்தடைந்தது. நாளை மாலை 6;00 மணிக்கு பால்குடம் எடுத்தல் மற்றும் தீமிதி உற்சவமும், நாளை மறுதினம், மயானக்கொள்ளை உற்சவமும் நடக்கிறது.