ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏப்., 14ல் விசுக்கனி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2026 03:04
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வருகிற ஏப்., 14 அன்று செவ்வாய்க்கிழமை காலை விசுக்கனி தரிசனம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாத பிறப்பான சித்திரை 1 அன்று விசுக்கனி தரிசனம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 5:00 மணிக்கு அஷ்டாபிஷேகம் நடக்கிறது. பல்வேறு கனிவகையால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அலங்கார கொலு மண்டபத்தில் அனைத்து வகையான பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த உணவுப் பொருள்கள் தட்டுகளில் வைத்து காட்சிப்படுத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கைநீட்டம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.