மாசி முதல் செவ்வாய்; முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 03:02
கோவை; மாசி மாதம் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோவை சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் தீப ஒளியில் சந்தன காப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதேபோல் கோவை ராம்நகர் பட்டேல்ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிததார். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.