பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
பாவூர்சத்திரம்:அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 50ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 5.30 மணிக்கு 108 வேத விற்பன்னர்கள் மகா யாகபூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். வில்லிசை, மேளக்கச்சேரி நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா நாட்களில் அம்மனுக்கு மூன்று நேரம் சிறப்பு பூஜை, தீபாராதனை, வில்லிசை, மேளக் கச்சேரி நடக்கிறது. 15ம்தேதி நிறைவு விழாவில் 10 வில்லிசை குழுவினர், 3 குழுவினர் மேளக் கச்சேரி, பாண்ட் வாத்தியம், மகுட ஆட்டம், பெண்கள் கும்மி ஆட்டம், கனில் ஆட்டம், இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. இரவு அம்மன் சப்பரம் வீதியுலா, பூக்குழி இறங்குதல், வாணவேடிக்கை நடக்கிறது. பகல் 12மணி முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சிவன்பாண்டி செய்து வருகிறார்.