பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
தென்காசி:ஆய்க்குடி நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் வரும் 12ம் தேதி ராதா கல்யாண திருவிழா துவங்குகிறது. ஆய்க்குடி நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் லட்சார்ச்சனை மற்றும் ராதா கல்யாண திருவிழா கீழக்கிராம பிராமண சமுதாயம் சார்பில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் ராதா கல்யாண திருவிழா வரும் 12ம் தேதி துவங்குகிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், மதியம் சங்கல்பம், லட்சார்ச்சனை துவக்கம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் லட்சார்ச்சனை, சாயரட்சை தீபாராதனை, இரவு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
வரும் 13ம் தேதி காலையில் அபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி தர்ப்பணம், ஹோமம், கும்பாபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை, தீபாராதனை, இரவு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடக்கிறது. 14ம் தேதி காலையில் கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, ராதா கல்யாண உத்சவம் துவக்கம், அஷ்டபதி பஜனை, மாலையில் அலங்கார தீபாராதனை, இரவு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 15ம் தேதி காலையில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஞ்சவர்த்தி, திவ்ய நாம பஜனை, டோலோத்ஸவம், மதியம் ராதா கல்யாணம், ஆஞ்சநேய உத்சவம், மாலையில் அலங்கார தீபாராதனை, இரவு புஷ்பாஞ்சலி, தீபாராதனை ஆகியவை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.