வெங்காநல்லுார் துர்கா கணபதி கோயில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2026 12:02
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் துர்கா கணபதி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
காலையில் கணபதி யாகம் பூர்ணா குட்டி பூஜைகள் சிறப்பு ஹோமம் நடைபெற்று துர்கா கணபதிக்கு அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தன. கோயில் நிர்வாகம் சார்பாக மதியம் அன்னதானம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பி.ஏ.சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, நகராட்சி தலைவர் பவித்ரா, தெற்கு வெங்கா நல்லுார், கம்மாபட்டி, ராஜபாளையம் சுற்றுப்பகுகளில் இருந்து திரளானூர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துர்கா கணபதி கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.