பதிவு செய்த நாள்
26
பிப்
2026
02:02
குன்னுார்: வெலிங்டன் பால முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், ருத்ர சமஹஅபிஷேக ஆராதனை நடந்தது.
குன்னுார் வெலிங்டன் பால முருகன் கோவிலில், தினமும் நான்கு கால பூஜைகள், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மாதம்தோறும் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,நேற்று சஷ்டி கிருத்திகை ஒருங்கிணைந்து செவ்வாய் கிழமையில் வந்ததால், கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடான, ருத்ர சமஹ அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கவும், மன அமைதி மற்றும் கிரக தோஷ நிவர்த்திக்காக, ருத்ரம் மற்றும் சமகம் ஓதி அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, இறைவனுக்கு, 16 வகையான உபசாரங்கள் செலுத்தும் அஷ்டோத்திர சோடச உபசார பூஜை, புஷ்பாஞ்சலி நடந்தது.
ராஜா அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளுக்கான ஏற்பாடுகளை, அர்ச்சகர் டாக்டர் சுப்ரமணியம் தலைமையில், முருக பக்தர்கள் செய்திருந்தனர்.