பெருமாள் சுவாமி கோவிலில் பக்தர்கள் பூ மிதித்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2026 02:02
பாலக்காடு: பாலக்காடு அருகே, பெருமாள் சுவாமி கோவிலில் சிவராத்திரி மகோற்சவம் கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு அய்யப்புரம் பகுதியில் உள்ள பெருமாள் சுவாமி கோவிலில், சிவராத்திரி மகோற்சவம் கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ல் அதிகாலை 4:30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 4:45 மணிக்கு வாகச்சார்த்து, 5:00க்கு மகாகணபதி ஹோமம் நடந்தது. அதன்பின், கல்பாத்தி ஆற்றில் இருந்து செண்டை மேளம் முழங்க தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் சுற்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
அதன்பின், மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு கொலு மண்டபத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி அருள்பாலித்தார். இரவு, 11:00 மணிக்கு தாலம் எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 பக்தர்கள் பூ மிதிக்கும் வழிபடும் நடந்தது. பக்தர்கள் அக்னி குண்டத்தில் பூ மிதித்து சுவாமியை வழிபட்டனர். நிறைவாக, பட்டாபிஷேகம் நிகழ்வுடன் உற்சவம் நிறைவடைந்தது.