திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2026 08:03
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திருத்தளிநாதர் கோயில் நவக்கிரக மண்டபத்தில் 12 கலசங்கள் பிரதிஷ்டை செய்து சிறப்பு யாகசாலை பூஜைகள் காலை 8:00 மணிக்கு துவங்கியது. பின்னர் பூஜைகள் நிறைவடைந்து காலை 10:00 மணிக்கு பூர்ணாகுதி தீபராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் சனீஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது.