மாத சிவராத்திரி முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2026 12:03
அவிநாசி; ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் மாத சிவராத்திரி முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் மாத சிவராத்திரி முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி திருப்பூர் சிவனடியார் திரு கூட்டத்தின் சார்பில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவிவேகானந்த சேவாலாய அறங்காவலர் செந்தில்நாதன் ஆகியோர் ஏற்பாட்டில் முற்றோதுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 70 சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருவாசகத்தில் வரும் திருப்பொற் சுண்ணம் என்ற பாடலுக்கு பெண்கள் கோலாட்டம் ஆடினர்.