ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் சிப்பந்திகள் உத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2026 12:03
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சிப்பந்தி உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, பங்குனி மாத அமாவாசையான நேற்று, சிப்பந்தி உத்சவம் வெகு விமரிசையாக நடந்தது. காலை 9:00 மணிக்கு அமாவாசை சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் உத்சவம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:15 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதி மற்றும் மாட வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்சவ ஏற்பாடுகளை கோவில் சிப்பந்திகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.