ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2026 06:03
ஆனைமலை: ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் யுகாதி பண்டிகை சிறப்பு பூஜை நடந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாத பெருமாள் கோவிலில், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தாயாருடன், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.