Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஷ்ணு அவதாரங்கள் கணக்கிட முடியாதவை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு ‘லைப் ப்ளூபிரின்ட்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு ‘லைப் ப்ளூபிரின்ட்’

பதிவு செய்த நாள்

23 மார்
2026
01:03

சென்னை: ‘‘காஞ்சி மஹா பெரியவரின் வாழ்க்கை தத்துவம், நம் அனைவருக்கும் ஒரு லைப் ப்ளூபிரின்ட்,’’ என, ‘தினமலர்’ நாளிதழ் இணை இயக்குனர் ரா.லட்சுமிபதி தெரிவித்தார்.


‘தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்’ சார்பில், எழுத்தாளர் ராம.ரவிச்சந்திரன் எழுதிய, ‘ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமி மதுரமாலை’ புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது.


‘தினமலர்’ நாளிதழ் இணை இயக்குனர் ரா.லட்சுமிபதி புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.


விழாவில், ரா.லட்சுமிபதி பேசியதாவது: ‘தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்’ சார்பில், தொடர்ச்சியாக ஆன்மிக புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். துவக்கத்தில் ஆன்மிக மலரில் உள்ள கதைகளை வெளியிட்டோம். பின், ‘பச்சைப்புடவைக்காரி’ என்ற தொடரை வெளியிட, அது வாசகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, மஹா பெரியவரின் புத்தகங்களை வெளியிட்டு வந்தோம்.


அந்த வரிசையில், தற்போது எழுத்தாளர் ராம.ரவிச்சந்திரன் எழுதியுள்ள, ‘ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமி மதுரமாலை’ என்ற ஆன்மிக புத்தகத்தை வெளியிட்டு உள்ளோம். இதில், மஹா பெரியவரின், 100 ஆண்டு கால வாழ்க்கை வரலாறு, கவிதை நயத்தில் இடம் பெற்றுள்ளது.


இதை, மனிதன் வாழ்வதற்கான கையேடாக நினைக்க வேண்டும். ரிஷிகள் வாழ்க்கை முறை குறித்த கதைகளை புராணங்களில் படித்துள்ளோம். ஆனால், அதை நாம் வாழ்ந்த கால கட்டத்தில், மஹா பெரியவர் வாயிலாக பார்த்துள்ளோம்.


பொதுவாக, குறைவு என்றால் இழப்பு என படித்துள்ளேன். ஆனால், குறைவு என்பது அமைதி என, மஹா பெரியவர் வாழ்ந்து காட்டினார்.உணவு, உறைவிடம் என அனைத்திலும் எளிமை வாயிலாக, இனிமை மற்றும் மன அமைதி கண்டவர் மஹா பெரியவர்.


சமைப்பதற்கு முன், ஒரு பிடி அரிசியை எடுத்து அருகில் உள்ள கோவில்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கருத்துகளை போதித்துள்ளார்.


அவர் சொன்ன வழியில் நாம் செயல்பட்டால், இன்று சமூகத்தில் பசி என்பதே இருக்காது. ஏரி, குளம், குட்டைகளின் முக்கியத்துவம் குறித்து, தற்போது நாம் பேசி வருகிறோம். ஆனால், அதன் முக்கியத்துவம் குறித்து அன்றே மஹா பெரியவர் சொல்லியுள்ளார். தற்போது நாம் பணம், ஆளுமை திறன் என, எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.


ஆனால், மஹா பெரியவர், உலக அமைதி என்ற குறிக்கோளுடன், நாடு முழுதும் பாதயாத்திரை சென்றுள்ளார். எனவே, இதை நாம் வெறும் புத்தகம் என நினைக்க வேண்டாம். எளிய வாழ்வு – பெரிய அமைதி என்ற மஹா பெரியவரின் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும், நமக்கான ஒரு ‘லைப் ப்ளூபிரின்டாக’ பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில், நல்லி குப்புசாமி, நுாலாசிரியர் ராம.ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar