Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
10:03

சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ஒன்றாம் தேதி ஆராட்டு நடக்கிறது.


உத்திர திருவிழாவுக்காக நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கியது. கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு தந்திரி மகேஷ் மோகனரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு பிம்பசுத்தி பூஜைகளை தொடர்ந்து கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கொடி பட்டம் கோயிலை சுற்றி வலம் வந்து கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. அங்கு பூஜைகளுக்கு பின்னர் காலை 11:50 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.


ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக உற்ஸவ பலி, இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் ஸ்ரீ பூதபலியும் நடை பெறுகிறது. மார்ச் 31- இரவு அத்தாழபூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். ஏப்ரல் 1 ம் தேதி காலை நடை திறந்து உஷ பூஜை நிறைவு பெற்று 9:00 மணிக்கு சுவாமி யானை மீது பம்பைக்கு எழுந்த ருளுவார். மதியம் பம்பை திருவேணி சங்கத்தில் ஆராட்டு நடைபெறும். அதன் பின்னர் மதியம் 3:00 மணிக்கு சுவாமி சன்னிதானத்திற்கு திரும்ப எழுந்தருளுவார். சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நடைபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும். மார்ச் 31 வரை விழா நாட்களில் காலை 8 :15 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 1ம் தேதி ஆராட்டு தினத்தில் நெய்யபிஷேகம் நடைபெறாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar