Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறு சக்தி விநாயகர் கோயிலில் ... மதுரை சித்திரைத்திருவிழா வீதி உலா மீனாட்சி அம்மன் கோயில் அறிவிப்பு மதுரை சித்திரைத்திருவிழா வீதி உலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
 ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
06:03

ஆற்பாக்கம்: ஆற்பாக்கம் திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கத்தில் திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் நடைபெறும். கடைசியாக 2014ல் பிரம்மோத்சவம் நடந்தது. அதன்பின், கொடி மரம் திருப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரம்மோத்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப்பின் பங்குனி பிரம்மோத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், இன்று காலை 6:00 மணிக்கு கொடிமரத்திற்கு பல்வேறு பூஜை செய்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு, சிம்ம வாகன உத்சவமும் நடந்தது. நாளை காலை சூரிய பிரபையும், இரவு சந்திர பிரபை உத்சவமும் நடக்கிறது. இதில், ஐந்தாம் நாள் உத்சவமான வரும் 27ம் தேதி காலை அதிகார நந்தி உத்சவமும், இரவு திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து தங்க ரிஷபத்தில் வீதியுலாவும் நடக்கிறது.ஏழாம் நாள் உத்சவமான வரும் 29ம் தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 3ம் தேதி மாலை உற்சவசாந்தி அபிஷேகத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar