Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் ... புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குலதெய்வ கோவிலில் வழிபாடு. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்கு வடுகநாத சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கொங்கு வடுகநாத சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 மார்
2026
10:03

திருப்பூர்: காசிக்கு நிகரான பைரவ தலமாக போற்றப்படும் குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி மற்றும் சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொங்காலம்மன், சின்னம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.


கடந்த, 17ம் தேதி விக்னேஷ்வரர் பூஜை, கிராமசாந்தி, 18ம் தேதி மஹா கணபதி ேஹாமம், பிரவேச பலி பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. சுதர்ஷன ேஹாமம், லட்சுமி ேஹாமம்; அஷ்ட பைரவர் ேஹாமம் மற்றும் நான்கு கால வேள்வி பூஜைகள், வேதமந்திரங்களுடன் நடைபெற்றன. 22ம் தேதி, மாமாங்கம் பர்வதவர்த்தினி உடனமர் ராமலிங்க சுவாமி கோவிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து, மங்கள இசை, வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள், கொங்காலம்மன், சின்னம்மன், அய்யப்ப சுவாமி விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9:00 முதல், 9:30 மணிக்குள், மூலாலய விமான கலசம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கும்; காலை, 10:00 முதல், 10:30 மணிக்குள், கொங்கு வடுகநாத சுவாமி, ஸ்ரீசவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 22ம் தேதி முதல், நேற்று வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள், திருப்பணி குழுவினர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் செய்திருந் தனர். இன்று துவங்கி, தொடர்ந்து, 48 நாட்களுக்கு, தினமும் காலை, 11:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கும். மண்டல பூஜை முன்பதிவுக்கு, 83446 02999, 87784 34313 என்ற எண்களில் அணுகலாம் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar