அயோத்தி ராமர் கோவிலில் குவியும் பக்தர்கள்; நாளை நடைபெறுகிறது சூரிய திலகம் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 11:03
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ராம நவமி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ராம நவமி தினமான நாளை காலை முதல் ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ராம்லல்லாவின் தரிசனம் காண குவிந்து வருகின்றனர்.
சூரிய திலகம் வழிபாடு: ராம நவமியை முன்னிட்டு சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெறும். இது குறித்து ஆச்சார்யர் பண்டிட் ராகேஷ் திவாரி கூறியதாவது; அனைத்துச் சாதகமான சமயங்களும் (சம்பவங்களும்) 27ஆம் தேதியன்று அமைகின்றன; எனவே, ராம் நவமி வரும் மார்ச் 27, வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படும். அயோத்தி ராமர் கோவிலில் சூரிய திலகம் நிகழ்வும் அன்றைய தினமே நடைபெறும்..." இவ்வாறு கூறினார்.