பழையசீவரம் வைத்தீஸ்வரர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 11:03
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பகுதி மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் தினசரி ஒருக்கால பூஜை நடைபெறுகிறது. இக்கோவிலில் சீரமைப்பு பணி செய்து அம்பாளுக்கு புதிய சிலை அமைத்து திருக்குட நன்னீராட்டு விழா செய்ய அப்பகுதி மக்கள் மற்றும் அடியார்கள் தீர்மானித்தனர். அதன்படி, சிறிய அளவிலான அக்கோவிலை விரிவுப்படுத்தி புனரமைப்பு பணி செய்ததோடு தையல்நாயகி அம்பாளுக்கு புதிதாக சி லை அமைத்து நேற்று நன்னீராட்டு பெருசாந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி மாலை தையல்நாயகி அம்பாள் திருமேனி கரிகோலமும், நேற்று முன்தினம் முதற்கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை அம்பாள் சிலைக் கு புனித கலசநீர் ஊற்றி மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில், பழையசீவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.