Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நவமி; கும்பகோணம் ராமசாமி ... ராமநவமி: நாக்பூரில் உலக சாதனை படைத்த பிரம்மாண்ட மஹா ஆரத்தி நிகழ்ச்சி ராமநவமி: நாக்பூரில் உலக சாதனை படைத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநவமி ; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் குடம் குடமாக 2,000 லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
 ராமநவமி ; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் குடம் குடமாக 2,000 லிட்டர் பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
11:03

சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி என அழைக்கப்படும், பஞ்சவடீ திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி ஸ்ரீவேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், நாளை ராமநவமி உத்சவத்தையொட்டி, பஞ்சவடீ திருத்தலத்தில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


நேற்று புண்யாஹவாசனம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடைபெற்றது. தொடர்ந்து காலை, லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. ராம நவமியை முன்னிட்டு, இன்று அதிகாலை 4:00 மணிக்கு, ராமர் சன்னிதியில், விஸ்வ ரூப தரிசனம், கோ பூஜை நடைபெற்றது. அதன்பின், காலை 5:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், காலை 6:00 மணிக்கு மேல், யாக சாலையில் ஏழாம் கால பூஜை , காலை 8:30 மணிக்கு, சீதா சமேத ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலாபிஷேகம், வாசனை திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். காலை 10:00 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar