Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏற்றம் தரும் காஞ்சிபுரம் ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வடிவமைப்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் ...
முதல் பக்கம் » துளிகள்
பஞ்சபூததலங்களுள் ஏகாம்பரநாதர் விரும்பி உறைவது காஞ்சி மாநகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சபூததலங்களுள் ஏகாம்பரநாதர் விரும்பி உறைவது காஞ்சி மாநகர்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
05:03

காஞ்சி மாநகரம், தென் மாநிலங்களில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றா கும். பஞ்சபூததலங்களுள் முதன்மை யானதும், இறைவன் விரும்பி உறைவதும் காஞ்சி மாநகரமே. நகரேஷு காஞ்சி என்று சொல்வர். அப்படியென்றால் நகரங்களுள் சிறந் தது காஞ்சி என்று பொருள். பண் டைய காலத்தில் புகழ்பெற்று விளங் கிய நகரம். பலரும் போற்றிப் பாடிய தலம். காஞ்சி திருத்தலத்தை சைவ சமய அருளாளர்களான, அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்க வாசகர், அருணகிரிநாதர், வைணவப் பெரியோர்களான ஆழ்வார்கள் எனப் பலரும் பக்திரசம் ததும்பும் பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடி இருக்கின்றனர். இவர்களைத் தவிர கர்நாடக இசை யின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்து சாமி தீட்சிதர் ஆகியோராலும் புகழ்ந்து பாடப்பட்ட தலமாக காஞ்சிபுரம் திகழ்கிறது. பாபநாசம் சிவனும் இந்தத் திருத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். இப்படி பலராலும் போற்றிப் பாடப் பட்ட பெருமைக்குரிய இந்தத் தலத்தில் அருளாட்சி செலுத்துகிறார் ஏகாம்பரேஸ்வர்.


தழுவக்குழைந்த பெருமான்!


ஒருநாள் திருக்கயிலையில் இறைவ னும், இறைவியும் மகிழ்ச்சியுடனிருக் கும்போது, அம்மை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, சூரிய, சந்திரர், ஒளிநீங்கி, உலகம் முழுதும் இருளானது. படைப்பு. இறைவழிபாடு முதலிய அறங்கள் செய்யப்படாது நீங்கின. இது கண்டு திடுக்கிட்ட அம்மையார் கண்களிலிருந்து கைகளை எடுத்துக் கொள்ள, சிவபெருமான் கண்களைத் திறக்க, உலகம் முன்போல் ஒளிபெற்று விளங்கியது. தன் செயலுக்கு வருந்திய அம்பிகை யிடம் ஐயன், "என் கண்களை மூடித் திறந்த சிறுபொழுதில் உலகத்துக்கு பல ஊழிக்காலம் கழிந்து உயிர்கள் வருத்தின. தாமங்கள் தடைப்பட்டன. அதனால் உனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க, மண்ணுலகில் தோன்றி, நகரங் களில் சிறந்த காஞ்சியில் எம்மைக் குறித்து தவமியற்றி வழிபடுவாயாக." என்று கூறினார்.


அம்மையும் காஞ்சியை அடைந்து. அங்குள்ள ஒற்றை மாமரத்தின் கீழ் மண லால் லிங்கம் அமைத்து, அன்றாடம் முறையாக வழிபாடு செய்து இறை வனை வழிபட்டு வரும் நாட்களில், ஒருநாள் அம்மையின் உறுதிப்பாட்டை சோதிக்க எண்ணிய இறைவன், எல்லா நன்னீர் நதிகளையும் உருண்டு வரச் செய்தார். அவையெல்லாம் ஒன்று திரண்டு, கம்பையாற்று நீருடன் சேர்ந்து ஊழிக்கால வெள்ளமென வந்தது. அதைக் கண்ட அம்மையார், இப்பெ ருவெள்ளம் இறைவன் மீது செல்லுமே, இனி யான் என் செய்வேன் என்று உடல் அதிர்ந்து வளைக்கரத்தால் இறைவனை இறுகத் தழுவிக் கொண்டார். இறைவன் தன் திருமேனி குழைந்து தனத்தழும்பும், வளைத்தழும்பும் கொண்டதால் உலகம் யாவும் இன்பக்கடலில் ஆழ்ந்து மகிழ்ந்தது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar