திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா: பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2026 04:03
திருத்தணி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில் இன்று பாண்டவர் பிறப்பையொட்டி, உற்சவர்கள் தர்மர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி அம்மனுக்கு, 1,000 பிஸ்கட் பாக்கெட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.