Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூரில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்: ... மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் மயிலம் முருகன் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் குண்டம் விழா கோலாகலம்; குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் குண்டம் விழா கோலாகலம்; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

31 மார்
2026
12:03

ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் இருந்து குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று மார்ச் 31ம் தேதி நடைபெற்றது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா  நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு,ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு  தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு  படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு,தாரை தப்பட்டை முழங்க,மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. குண்டத்தில் கற்பூரம் ஏற்றி  பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவினர்.அதிகாலை  முதலில்  பூசாரி பார்த்திபன் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள், பொது மக்கள்,உள்ளிடோர் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள்,திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள்,வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar