Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் பங்குனி ... காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

பதிவு செய்த நாள்

31 மார்
2026
12:03

கும்பகோணம் : கும்பகோணத்தில், பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று, நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகை, திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்!


கும்பகோணத்தில் மகாபிரளத்தின் போது அமிர்த குடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி ஸ்ரீ வில்வனேசர் எனும் திருநாமம் பெற்று பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் ஸ்ரீ நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க நாககேஸ்வரர் என திருநாமம் பெற்றார் தாயார் பிரஹந்நாயகி, சூரியன் தனது கிரஹணம் மழுங்கி கலங்கி நின்ற போது அசரீரியின்படி சூரிய தீர்த்த்தத்தில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வர சுவாமியை வழிப்பட்டு பேறு பெற்றார் இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் தனது சூரிய கதர்களால் நாகேஸ்வரரை வழிபடுவதை இன்றும் காணலாம் இங்கு சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேஷத்திரம் என பெயர் பெற்றது. இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா, 13 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 23 ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்ச்கியாக, 9 ஆம்  நாளான இன்று, உற்சவர் நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகை, திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தொடர்ந்து விழாவின் 10ம் நாளான நாளை 1ஆம் தேதி புதன்கிழமை மகாமக குளத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, பங்குனி உத்திர தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 11 ஆம் நாளான 2 ஆம் தேதி வியாழக்கிழமை ஸப்தாவர்ணம், ஏகாந்தக்காட்சி 12 ஆம் நாளான 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடையாற்றி, வீதியுலா 13 ஆம் நாளான 4 ஆம் தேதி சனிக்கிழமை ஊஞ்சல் உத்ஸவசாந்தியுடன் பங்குனி பெருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar