சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2026 11:03
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகளும், கோவில் உட்பிரகாரம் வழியாக சுவாமி உலாவும் நடக்கிறது. 9வது நாளான நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சுப்ரமணி ய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், கெங்கையம்மன் கோவிலில் இருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் நடந்தது. நாளை 1ம் தேதி காவடி எடுத்தல் மற்றும் அலகுபோடுதல் நடக்கிறது.