செந்தில்குமரன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 12:04
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் செந்தில்குமரன் ஆலயத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் தாழை மடல் காளியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் , காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாகச் சென்று, செந்தில்குமரன் கோயில் முன்பு, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் மூலம் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.