கோவை சுந்தராபுரத்தில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 12:04
கோவை: முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் 17-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு முளைப்பாரி இடுதல் முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம் பால்குடம் கொண்டு வருதல் ஆகியன நடைபெற்றன பங்குனி உத்திர நாளான இன்று காலை விக்னேஸ்வர பூஜை சிறப்பு ஹோமங்கள் ஆகியன நடைபெற்றன நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் பக்தர்களின் கோஷத்துடன் நடைபெற்றது இதில் உற்சவர் முருகன் வள்ளி தேவசேனா சமேதராக மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது