முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பு பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய விதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.பின்பு முருகன் வள்ளி தெய்வானைக்கு பால் அபிஷேகம் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்புபூஜை நடந்தது. பிள்ளையார் கோயிலில் இருந்து தாலுகா அலுவலகம் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் நடந்தது.முக்கிய விதிகளில் தேர் ஊர்வலமாக வந்தது.கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரகடவுள் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்று சிறப்புபூஜை செய்தனர்.அபிராமத்தில் இருந்து பால்குடம், காவடி,வேல்குத்தி ஊர்வலமாக வந்தனர்.குமரகடவுள் முருகனுக்கு 33 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது.கால் வலிப்போக்கும் முக்கிய ஸ்தலமாக இருப்பதால் பக்தர்கள் உடைமரம் குச்சி வாங்கி கோயில் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் சுப்பிரமணிய சாமி கோயில் பங்குனி உத்திர விழா கடந்த வாரம் கொடியேற்றுத்துடன் துவங்கியது.பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.