பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 05:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள், சவுந்தரவல்லி தாயார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த கோயிலில் ஆண்டு தோறும் பவுர்ணமி நாளில் பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு மார்ச் 31 இரவு 8:00 மணிக்கு அனுக்ஞையுடன் விழா துவங்கியது. நேற்று காலை பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நிறைவடைந்து மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தாயார், பெருமாள் ஊஞ்சல் சேவையில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். திருமண சடங்குகள் நிறைவடைந்து மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏப்., 5ல் மாற்று திருக்கோலமும், மறுநாள் இரவு பூ பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் வீதி உலா வருகிறார். விழாக் குழுவினர், தேவஸ்தான டிரஸ்டிகள் ஏற்பாடுகளை செய்தனர்.