Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் தங்க குதிரை ... கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர் தரிசன காட்சி கோலாகலம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர் தரிசன காட்சி கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
10:04

தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி நடந்தது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா துவங்கியது. வெள்ளி ரிஷப வாகன திருவீதியுலா, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தெப்பத்தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், வெகு விமர்சையாக நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான நேற்று, பங்குனி உத்திரத்தையொட்டி, அதிகாலை, 3:30 மணிக்கு, யாகசாலை பூஜை, மூலவர் கால சந்தி அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 4:30 மணிக்கு, கனகசபை மண்டபத்தில், நடராஜர் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, அரிசிமாவு, சந்தனம், குங்குமம், திருநீறு, இளநீர், தேன் உள்ளிட்டவைகள் கொண்டு, திருமஞ்சனம் நடந்தது. காலை, 9:40 மணிக்கு, பங்குனி உத்திர தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள், ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு, 8:00 மணிக்கு, யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
விருதுநகர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar