Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர் ... போடி ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை போடி ஐயப்பன் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
10:04

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மார்ச்.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமிகள் குதிரை, காளை, பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள்,காவடிகள், பறவை காவடிகள் எடுத்து சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளியவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை நான்கு ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் தீபாராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராமத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar