Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... கீரப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்  கீரப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம்: திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம்: திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
10:04

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் அதிகாலை வேத வியாச பட்டர், திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது.


வைணவ திவ்யதேசங்கள் 108ல் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான திருவரங்கம் திருக்கோயில் ஆதிபிரம்மோத்ஸவத்தில் நேற்று அங்குரார்ப்பத்தம் நடைபெற்றது. விபீஷணாழ்வார் ஸ்ரீரங்க விமானத்தை அயோத்தியிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லுகையில் சந்திரபுஷ்கரணி கரையில் இறக்கி வைத்தார். உறையூரில் அப்பொழுது அரசனாயிருந்த தர்மவர்மா மறுநாள் பிரம்மா ஏற்படுத்திய உத்ஸவம் நடத்த வேண்டிய தினமாக இருந்ததால், தர்மவர்மா கோரிக்கையை ஏற்று விபீஷணாழ்வார் இந்த பிரம்மோத்ஸவத்தை நடத்த அனுமதித்தார் என ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும், லக்ஷ்மி காவியத்திலும் காணப்படுகிறது. இங்கு பங்குனி திருவிழா  ஆதி பிரம்மோத்ஸவம்  மார்24ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பதினொன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பத்தாம் திருநாள் அதிகாலை வேத வியாச பட்டர், திருமஞ்சன கட்டியம் செவித்தல் நடைபெற்றது. நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar