திருச்செந்தூரில் சுவாமி, வள்ளி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பவரசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 12:04
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடைபெற்றது.தொடர்ந்து வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளினர். தமிழக முழுவதும் இருந்து திருச்செந்தூருக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி அங்க பிரதட்சணம் செய்தும் அழகுவேல் குத்தியும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அம்மனுக்கு தவசு கோலத்தில் காட்சி அளித்து அங்கிருந்து மேலக்கோவில் பந்தல் மண்டப முகப்பை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கும்,அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்ந்தனர். பின்னர் இரவு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் மேளதாளம் முழங்க வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.