உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீ பத்மாவதி தாயார்-பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் திருமஞ்சனம் நடந்தது. மாலை ஸ்ரீ பத்மாவதி தாயார், பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள், தாயாரை தரிசனம் செய்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.