எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கடந்த, 17ல் கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. 24ல் சுவாமி வெங்கமேடு சென்று, புனுகு, சந்தனம் மாற்றி பூஜை முடித்து வரப்பட்டது. 27 முதல், 31 வரை இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு பூவோடு எடுக்கப்பட்டது. 31 இரவு, 11:00 மணிக்கு அம்மை அழைத்தல், முப்போடு மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கை நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிமுதல் முப்போடு பொங்கல் வைத்தல், காணியாளர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை, கம்பம் எடுத்து விடுதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.