தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் இடித்து புதிதாகக் கட்டினார். இதைப் பார்த்த ஸ்டீபன், நானும் இதை போல செய்வேன். அதற்காக கடன் வாங்கினாலும் பரவாயில்லை என ஜம்பம் பேசினான். அதற்கு அவனுடைய தாயார் பிலோமினாள், ‘‘ஒரு விஷயத்தை சொல்வதற்கும், செய்வதற்கும் தகுதி வேணும்... பொறாமைப்பட்டால் நிம்மதி கெடும்’’ என அறிவுறுத்தினாள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.