ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா யாகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2026 06:11
மயிலாடுதுறை: ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மை, விவசாயம் செழிக்க மழை வேண்டி சர்வலோக சுபிக்ஷ மகா யாகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்து வழிபட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெப்பம் தணிந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்க, உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும் 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு சர்வலோக சுபிக்ஷ மஹா யாகம் நடைபெற்றது. யாகத்தில் ஏராளமான மூலிகை மற்றும் நறுமணப் பொருட்களை சேர்த்து பூர்ணாஹுதி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. யாக, பூஜைகளை அருள்குமரன் குருக்கள் செய்து வைத்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செல்வமுத்து குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.