காஞ்சி பாலதர்ம சாஸ்தா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2026 11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு, பாலதர்ம சாஸ்தா கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 9வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக கோவில் அருகில் அமைந்துள்ள ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து கொடி மர அபிஷேகமும், மகா கணபதி ஹோமமும் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டு கொடியேற்றமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து, இன்று இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நாளை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும், சனிக்கிழமை பாலதர்ம சாஸ்தாவுக்கு பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு அய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வர உள்ளார்.