முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2026 10:11
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில் 165ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் துவங்கியது.
விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு சூரிய பிரபை உற்சவம் நடந்தது. வரும் 20ம் தேதி வரை சுவாமிக்கு தினமும் காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 15ம் தேதி மதியம் 2:30 மணிக்கு சூரபத்ரன் புறப்பாடு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணம் வைபவம், 29ம் தேதி மாலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.