Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ... ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் வரும் 13ல் சித்திரை திருவிழா துவக்கம் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் திருச்செந்தூருக்கு இண்டர்சிட்டி ரயில் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
05:04

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அமர்ந்து செல்லும் வகையில், வெயில் கால சிறப்பு இண்டர்சிட்டி ரயில் இயக்க, பக்தர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரிய அளவில் மொத்த காய்கறி மார்க்கெட், உருளைக்கிழங்கு மண்டிகள், பூண்டு மார்க்கெட், வாழை சந்தை, கருவேப்பிலை சந்தை உள்ளிட்டவைகள் உள்ளன. உருளைக்கிழங்குகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு காய்கறிகள், உருளைக்கிழங்கு, பூண்டு போன்றவைகள் லாரிகள் மற்றும் சொந்த வாகனங்களில் விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கினால் கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதே போல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் பலரும் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் இயக்கினால் பழனி, திருச்செந்தூருக்கு செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இதுகுறித்து, ரயில் நல பயணிகள் சங்கம் (கோவை, திருப்பூர், திண்டுக்கல்) மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறியதாவது:


மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே வாரம் ஒருமுறை இரவு நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் வாரம் இருமுறை தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. இதனால் பல ஆயிரம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதே போல் மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர் இடையே வெயில் கால சிறப்பு ரயில் இயக்கினால் பழனி, திருச்செந்தூருக்கு ஆன்மீக பயணம் கொள்ளும் பக்தர்கள் பயன்பெறுவார்கள். தற்போது பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் செல்ல வேண்டும் என்றால், கோவையில் இருந்து பாசஞ்சர் ரயில் வாயிலாக பொள்ளாச்சி சென்று அங்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திரும்பி வரும் போதும் இதே நிலை தான். இண்டர்சிட்டி ரயில் போல் பகல் நேரத்தில் ரயில் இயக்கினால் இடங்களும் அதிகம் கிடைக்கும். பக்தர்கள் தங்களது வசதிக்கு ஏற்றார் போல் சென்று வரலாம். தென்மாவட்டங்களுக்கு காய்கறிகளை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கினால், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்று தங்கள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியும். அதே போல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து சின்னவெங்காயம் போன்றவைகள் மேட்டுப்பாளையம் எடுத்து வந்து விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு ரயில் மட்டுமே குறைந்த கட்டணத்தை தர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar