மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க ஏப். 27ல் குன்றத்து முருகன் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2026 04:04
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளுடனும் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து ஏப். 27 மாலையில் புறப்பாடாகிறார். ஏப்.28 அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று மே 1ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெற்று, மே 2ல் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை திறப்பு, பூஜை வழக்கம் போல் நடைபெறும்.