தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2026 11:04
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.