திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சி: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 07:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் சூரியன் பகவான் மூலவர் மீது விழும் அபூர்வ காட்சி இன்று நடந்தது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் (திருநீர் அண்ணாமலை) கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாளன்று, அதிகாலை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் லிங்கத்தின் மீது நேரடியாக விழும் அபூர்வ நிகழ்வு நடக்கும். அதன்படி இன்று நடந்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்கத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இக்கோயிலில் சூரியன், அண்ணாமலையாரை நேருக்கு நேர் வழிபடுவதாக நம்பப்படுகிறது.